Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது.

இங்கே துவங்கி வைக்கப்பட்டுள்ள 11 வளர்ச்சித் திட்டங்களும் மராட்டியத்தின் ஆபரணங்கள் ஆகும். வரி செலுத்துவோரின் பணத்தைக் கொள்ளையடித்து, பொய்யான வாக்குறுதிகளுடன் குறுக்குவழி அரசியல் செய்கிறவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாட்டின் வளர்ச்சி, குறுக்குவழி அரசியல் வாயிலாக வந்துவிடாது. நாட்டுக்கு குறுக்குவழி அரசியல் வேண்டாம், நிலையான வளர்ச்சி தான் தேவை” என்று அவர் பேசினார்.

Categories

Tech |