உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த திம்மராயன், நாகராஜ், கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 7 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.