செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போஸ்டர் ஒரு நாவலிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ . இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா ,ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாராவது குறித்து அதிகாரப்பூர்வமாக இயக்குனர் செல்வராகவன் அறிவித்திருந்தார் . இதில்நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார் .
இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் ஒரு குறிப்பிட்ட நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது . பிரெஞ்சு ஓவிய கலைஞரின் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்தில் இருந்து இந்த போஸ்டர் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.