பிரேசிலிலுள்ள நடால் கடற்கரையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.
பிரேசில் நாட்டில் நடால் என்னும் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு திருவிழா நடைபெற்றுள்ளது.
அவ்வாறு நடைபெற்ற சர்ஃபிங் விளையாட்டு போட்டியில் ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களை கொண்டு வந்து இதில் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது அகஸ்டஸ் சீசர் என்பவருடைய நாய் நடால் கடற்கரையில் வைத்து நடைபெற்ற சர்ஃபிங் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது.