கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை வெகுவாக உயர்ந்ததால், ஸ்வீடன் நாட்டினுடைய பிரதமரின் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஸ்வீடன் நாட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டுவசதித் துறையில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட்டின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே ஸ்வீடனின் பிரதமராக இருந்து வரும் ஸ்டீபன் தலைமையிலான அரசாங்கம் வீட்டு வசதி துறையை ஒழுங்குபடுத்துவதற்கு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக சாடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமரின் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஸ்வீடன் நாட்டின் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளர்கள். அதன்பின் பிரதமர் ஸ்வீடனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.