Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. சமந்தாவுக்கு போட்டியா களம் இறங்கிய பூஜா ஹெக்டே…. எந்த விஷயத்தில் தெரியுமா…? வெளியான தகவல்….!!!

நடிகை பூஜா ஹெக்டே ‘எஃப்3’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி செம்ம ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்கும் ‘எஃப்3’ படத்தில்  ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில்  சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் சமந்த ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல்  உலகமெங்கும்  பட்டையை கிளப்பியது.

அதனை விட பூஜா ஹெக்டே நடமாடும் இந்த பாடல் அதிக அளவில் பிரபலமாகும் என செய்தி வட்டாரங்கள் பேசப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் வெளிவந்த அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களுக்கும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனை பார்த்தது தான் பூஜா ஹெக்டே எஃப்3 படத்தின் படக்குழுவினர் இவரை அணுகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் இதற்கு முன்னரே ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ராணி என்கிற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் எஃப்3 படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி படைப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் பின்னணியில் நடிகை பூஜா இருந்தா.ர் மேலும் அதனுடன் எஃப்3 படத்தின் சிறப்பான பாடலில் யார் இயக்குகிறார் என்று யோசியுங்கள் என்று குறிப்பிட்டிந்தார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ் டகுபதி, வருண் தேஜ், மெஹரீன் கவூர் மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Categories

Tech |