Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடைபாதையில் சாதாரணமா போச்சு” பார்த்ததும் பதறிய மக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!

மக்கள் நடந்து செல்லும் பகுதியில் ராட்சத முதலையானது சாதாரணமாக ஊர்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாடத்திலுள்ள கும்பகோணம் டூ சென்னை சாலையில் 185 வருடங்கள் பழமைமிக்க அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இருக்கிறது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 ஆறுகளுக்குள் அணைக்கரை பகுதி இருப்பதால் இந்த பகுதி தீவுபோன்று காட்சியளிக்கும். இந்த பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் பெரும்பாலான முதலைகள் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது அது வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், செட்டிமேடு, நாஞ்சலூர், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, வேளக்குடி, அகரநல்லூர், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றது.

இந்த முதலைகள் அப்பகுதியில் ஆற்றில் இறங்கும்போது மக்கள் மற்றும் கால்நடைகளை அவ்வப்போது கடித்து இழுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் வந்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அணைக்கரை பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் சுமார் 7 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை சாதாரணமாக ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் பதற்றம் அடைந்தனர். எனினும் அந்த முதலை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சில பேர் பயமின்று முதலை மீது கயிறு வீசி அதை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் முதலையை அப்பகுதியில் இருந்து மெதுவாக நகர்த்தி ஆற்றில் இறக்கி விட்டனர். இவ்வாறு ஆற்றில் விடப்பட்ட முதலை அந்த பகுதியில் இருந்து நீந்தி சென்றது.

Categories

Tech |