Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி சென்ற ஆசிரியர்…. சட்டென நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் அன்புச்செல்வன்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சரஸ்வதி வழக்கம் போல் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது செல்லியம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |