Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெறும் மாதாந்திர பணி… தடை செய்யப்படும் மின்வினியோகம்… அதிகாரி அறிவிப்பு…!!

செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் துணை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து செந்துறை, இலங்கைச்சேரி, ஆதி குடிக்காடு ,உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன் குடிக்காடு, மருவத்தூர், சேடக் குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன் தத்தனூர், முல்லையூர், நந்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியா குறிச்சி,இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாகுறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல் குழி, கீழமாளிகை, மற்றும் மத்துமடக்கி போன்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனையடுத்து இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகின்றது. இதனால் அப்பகுதியில் காலை 9.45 மணி முதல் மாலை வரை மின்வினியோகமானது  தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |