Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஊரடங்கின் போது சுற்றினால்…? இப்படி தான் பண்ணனும்…. நடைபெறும் தீவிர கண்காணிப்பு பணி….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக தமிழக- ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என 55 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிவதால் அவர்களை காவல்துறையினர் நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகில் சத்துவாச்சாரி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்ததோடு அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Categories

Tech |