மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இதனையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கலெக்டர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பகுதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.