Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடற்கரை பகுதியில்…. நடைபெற்ற ஆலோசனை…. கலெக்டரின் திடீர் ஆய்வு….!!

கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல்  புதிய படகு தளம் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கலெக்டர் அரவிந்த் நேற்று கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகுத் துறையை பார்வையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளிடம் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் படகுகளை இயக்குவதற்கு வசதியாக புதிய படகு தளம் எங்கு அமைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து மேலாளரிடம் விவரங்களை கலெக்டர் அரவிந்த் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காந்திமண்டபம், முக்குடல் சங்கமம் ஆகியவற்றை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். அந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள்  அவருடன் இருந்தனர்.

Categories

Tech |