தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 34 அணிகள் கலந்து கொண்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உசிலங்குளம் பகுதியில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 34 அணிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி ஞாயிற்றுக் கிழமையான இன்றும் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் முதல் 3 பரிசாக ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தஞ்சாவூர், திருச்சி அணிகள் பரபரப்பாக மோதின. இதில் கால்பந்து போட்டியை ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டு ஆர்வமுடன் போட்டியை பார்த்து ரசித்தனர்.