Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர சோதனை…. வசமா சிக்கிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காசிராமன் ஆகியோர் ஆண்டிபந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிள்களை வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரும்பண்ணையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வண்டுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் புதுச்சேரியிலிருந்து 30 மதுபாட்டில்கள் வாங்கி வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |