Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதை சீக்கிரமா பண்ணுங்க…. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையேற்று நடத்தினார். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு துறை அலுவலர்களுடன்  பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மறு சீரமைக்கும் பணியில் மீன்வளத்துறையினருடன் பொதுப்பணித் துறையும் இணைந்து திட்ட வரைபடம் தயாரித்து பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை துறையினர் அடுத்த ஒரு மாதத்திற்குள் பழுதடைந்துள்ள சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் பழைய பேருந்துகளை கழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சரிவர இயக்க முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை கணக்கெடுத்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான இடங்களில் பேருந்துகள் காலதாமதமின்றி இயக்க வேண்டும். இதனைதொடர்ந்து குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தரமான பொருட்களை கொண்டு வீடுகள் கட்டப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் வீடு கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். இதனையடுத்து குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விரைவாக முடிக்க வேண்டும். மேலும் அரசு சலுகைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கவும், அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி அசோக் குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |