நாகை மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் மூலமாக பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல் அலுவலரான குகன் தொடங்கி வைத்துள்ளார் இந்நிகழ்ச்சிக்கு திமுக பேரூர் பொறுப்பாளரான சுப்பிரமணியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவரான ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உள்ளார்.
இந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலமாக தலைஞாயிறு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சின்னக்கடை தெரு ,அக்ரகாரம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவரான பால் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், தி.மு.க. நிர்வாகிகளான வீரக்குமார் மற்றும் வீரசேகரன் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.