Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தல்….அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இப்ராஹிம் ரைசி….!!!

ஈரான் நாட்டில்  நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது . 

ஈரான் நாட்டில்  கடந்த 18ஆம் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஈரான் தேர்தல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள  நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட்ட 4  வேட்பாளர்களில் சையத் இப்ராஹிம் ரைசி 1,78,00,000 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இவர் Mohsen Rezaee விட 3.3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், Abdolnasser Hemmati -யை விட 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும் , Seyed Amir Hossein Qazizadeh Hashemi 1 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளார் “என்று தெரிவித்துள்ளார்.மேலும் 60 வயதான இப்ராஹிம் ரைசி ஈரானின் தற்போதைய நீதித்துறை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 2017ம் ஆண்டு  தற்போதைய ஜனாதிபதி இருக்கும் Hassan Rouhani-னிடம் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |