டிரைவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனியை சேர்ந்த இங்கர்சால் என்பவர் ஸ்டாலினை வழிமறித்தார் .
அப்போது கையில் இருந்த அரிவாளை அவரது கழுத்து வைத்து கொலை செய்வதாக மிரட்டியும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ஸ்டாலின் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த இங்கர்சால் கைது செய்துள்ளனர்.