மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் ஜோசப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அந்தோணிசாமி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அந்தோணிசாமி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான ராஜ்குமார் என்பவருடன் இணைந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று திடீரென ராஜ்குமாரின் மீது மோதி விட்டார். இந்த விபத்தில் ராஜ்குமார் மற்றும் மாடசாமி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தோணிசாமி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு ராஜ்குமார் மற்றும் மாடசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ராஜ்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.