Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர்ச்சியாக 8 நோ பால்… நடராஜன் மீது சந்தேகத்தை கிளப்பிய ஷேன்… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

இந்திய அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நோ பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன்  தொடர்புபடுத்தி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

பிரிஸ்பேனில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ பால்களை வீசினார். 4-வது நாள் ஆட்டத்தில் 2 நோ பால்களை வீசினார். 8 நோ பாலில் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ பாலாக அமைந்தது. இதனை வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்னே நடராஜன் வீசிய நோபால் சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நடராஜன் பந்துவீசும் போது என் கண்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது. நடராஜன் எட்டு நோ பால்களை வீசியுள்ளார். அனைத்துமே மிகப்பெரியவை. அதில் ஐந்து நோ பால்கள் ஓவரின் முதல் பந்திலே வீசப்பட்டுள்ளது.  நாமெல்லாம் நோபால் வீசியிருக்கிறோம். ஆனால் ஓவரின் முதல் பந்திலே 5 நோ பால் வீசியது வித்தியாசமாக சுவாரசியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஷேன் வார்னேயின் இந்த சந்தேகத்திற்கு சமூக ஊடகங்களில் இந்திய அணி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |