நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அறிமுகபடுத்தப்பட்டனர். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூருடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிக முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே ஆஸ்திரேலிய வீரர் லாபஸ் சேனை வீழ்த்தினார்.
மேலும் அவர் இறுதி விக்கெட்டாக ஹசில் வுட்டை வீழ்த்தினார். இந்நிலையில் அணியின் துணைத் தலைவரான ரோகித் சர்மா நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்தை வீசினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாட்டிற்கு வெளியே சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது எளிதான காரியம் அல்ல.
ஆனால் நடராஜன் எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல் அதிகமான பொறுமையுடன் வலுவான தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.அதிகமாக பேசுவது கிடையாது. ஆனால் அவர் திடமான தனித்தன்மை வாய்ந்தவர். அவர் அணிக்காகவும் தனக்காகவும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். போட்டியில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று ரோகித் சர்மா மனதார பாராட்டி உள்ளார்.