இளம்பெண் ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 32 வயது உடைய இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து தமிழரசனுக்கும்-சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சபரிதாவும் திருமணத்திற்குப் பின்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக தமிழரசன்- சபரிதா இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து சபரிதா செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாக கூறப்படுகிறது. எனவே தமிழரசனுக்கு சபரிதா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த தமிழரசன் நேற்று சரிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை தேடி வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.