நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் . இவர் நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து நடித்த ஜீன்ஸ் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று . மேலும் இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , ராவணன் , எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து இவர் பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தன் கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் இருக்கும் இந்த அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.