Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நிரஞ்சனியின் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை நிரஞ்சனி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார் . இவருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் வருகிற 25ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடிகை நிரஞ்சனி பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார் . இதில் நிரஞ்சனியின் மூத்த அக்கா கனி, இரண்டாவது அக்கா விஜயலட்சுமி மற்றும் தோழிகள் கலந்து கொண்டுள்ளனர் .

நிரஞ்சனியின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படம்

நடிகை நிரஞ்சினியின் மூத்த அக்கா கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் . மேலும் அவரது இரண்டாவது அக்கா விஜயலட்சுமி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது . நடிகை விஜயலட்சுமி தனது தங்கையின் பேச்சிலர் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |