போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார்.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இன்றோடு அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை சஞ்சனாவுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நடிகை சஞ்சனா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.