நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராதிகா திரைப்படங்களில் நடித்து வருவதோடு சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
So shocked and dismayed to hear about the sad demise of cinematographer Niwas’s demise. Worked in my first film “Kizhakey Pogum Rail”share so many wonderful memories & a cameraman par https://t.co/auIsLMlIcM gentleman amd gentle soul🙏🙏🙏 pic.twitter.com/9tBVCtV0gT
— Radikaa Sarathkumar (@realradikaa) February 1, 2021
அதில் தன்னுடைய முதல் படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் இன்று காலமானதாக தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவாளர் நிவாஸ் 16 வயதினிலே, கோழி கூவுது, எங்க ஊரு மாப்பிள்ளை, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் ,நிறம் மாறாத பூக்கள் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் . இவர் தெலுங்கு , ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார் . மேலும் இவர் எனக்காக காத்திரு , நிழல் தேடும் நெஞ்சங்கள், கல்லுக்குள் ஈரம் ,செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.