பிக்பாஸ் பிரபலம் யாஷிகா நடிப்பில் உருவாக உள்ள சல்பர் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் .
நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. தற்போது இவர் இயக்குனர் புவன் இயக்கத்தில் சல்பர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முதல்முறையாக யாஷிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் புவன் ‘சித்தார்த் விபின் அவர்கள் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்து விட்டேன் . இதுவரை கிளாமராக மட்டுமே யாஷிகாவை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் ஒரு பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியாக பார்ப்பார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட உள்ளது. சென்னை உட்பட பல பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது’ எனக் கூறியுள்ளார்.