நடிகர் ஆதியுடன் பிரபல நடிகை நிக்கி கல்ராணி மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஆதி தற்போது குட் லக் ஷகி, பார்ட்னர், கிளாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் சிவுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியுள்ளார் .
ஏற்கனவே நடிகர் ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது சிவுடு படத்தில் மீண்டும் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜெய் இசையமைக்கிறார்.