நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய காட்சியை படமாக்குவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திரா நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சி சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்அந்த காட்சிகளை படக்குழுவினர் டெல்லியில் படமாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.