இயக்குனரும் நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகி வந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் ‘யோகி’, ‘வடச்சென்னை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை முகவரி, காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆதம் பாவா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘555’ பட நாயகி சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார் .
மேலும் இந்த படத்தில் மாரிமுத்து ,சரவண சக்தி ,அர்ஜுனன் ,கோவை பாபு ,ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், சுப்ரமணியசிவா ,ராஜ்கபூர், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ரவி வெங்கட்ராமன் ,சலீமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ‘நாற்காலி’ படத்திற்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடைசியாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ என்ற பாடலை பாடியிருக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . மேலும் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.