Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடி… டுவிட்டரில் எச்சரிக்கை…!!!

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடிக்கு ட்விட்டரில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகர் அருண்விஜய் தற்போது ஏராளமான திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌ . இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் பெயரை வைத்து இளம்பெண்களை ஏமாற்றியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஆர்வமுள்ள இளம் பெண்கள் தேவை என்ற பெயரில் பொய் விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி உள்ளது .

இதை பார்த்து பதறிப்போன அருண் விஜய் ட்விட்டரில்  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார் . சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களில் அடிக்கடி மோசடிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |