Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்துடன் இணைந்த பிக்பாஸ் நடிகை… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பரத்  சிம்பா ,8,பொட்டு, காளிதாஸ், நடுவன், ராதே, 6 ஹவர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜயராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே அவன் இவன், தெகிடி , முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நடிகர் பரத்துடன் ஜனனி ஐயர் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘முன்னறிவான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் மிர்ச்சி செந்தில் குமார், சின்னி ஜெயந்த் ,கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |