Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’… 2-வது பாடல் குறித்த அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல்  குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன், லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

https://twitter.com/mari_selvaraj/status/1366003926294622210

இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வருகிற மார்ச் 2-ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |