மாரி செல்வராஜ்- தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கர்ணன்’ . இது நடிகர் தனுஷின் 41 வது படமாகும் . இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் .இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . மேலும் லால் கௌரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே ‘கர்ணன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து மீதமுள்ள காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தனர் . சமீபத்தில் நடிகர் தனுஷ் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்தார் . இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . மேலும் நடிகர் தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.