நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன் ‘. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Happy to present Paadal 2 of #Karnan#PandarathiPuranamhttps://t.co/bRqrxVXuWz @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @KarnanTheMovie @thinkmusicindia @ZeeTamil #KarnanArrivesOnApril9
— Kalaippuli S Thanu (@theVcreations) March 2, 2021
சமீபத்தில் கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.