கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது .
Super excited for this one @SathyaJyothi_ ! 🥰 #D43ShootBegins 💃🏻 https://t.co/CDX1iExqCe
— Malavika Mohanan (@MalavikaM_) January 8, 2021
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளதாக இந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .