நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் . இதனிடையே நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது .
இந்தப் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது . ‘நானே வருவேன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் திரில்லர் வகையில் தயாராக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே தமன்னா நடிகர் தனுஷுடன் இணைந்து வேங்கை, படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.