நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார்.
#Sulthan, a honest effort to bring a complete family entertainer with humor, romance, action & strong man to man relationship. Hope you all like it #SulthanTeaser– https://t.co/fkFTku1MxV@iamRashmika @iYogiBabu @Bakkiyaraj_k @iamviveksiva @MervinJSolomon#SulthanFromApril2
— Karthi (@Karthi_Offl) February 1, 2021
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சுல்தான்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . ஆக்சன் காட்சிகள் , மிரட்டலான வசனங்களுடன் வந்த இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .