நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது .
ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க் . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி வந்தது . இந்த படத்தில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ளார்.
The POWER is here 🔥
It's finally time to #MakewayforVakeelSaab #VakeelSaabTeaser here -> https://t.co/HV98wQTpOOPowerstar @PawanKalyan #SriramVenu @shrutihaasan @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @BoneyKapoor @MusicThaman
— Boney Kapoor (@BoneyKapoor) January 14, 2021
மேலும் நிவேதா தாமஸ், அனன்யா , அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக நிறைவடைந்தது . இந்நிலையில் ‘வக்கீல் சாப்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது .