நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார் . இதன்பின் இவர் நடிக்க உள்ள படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.
Motion capture begins. Creating the world of #Adipurush #Prabhas #SaifAliKhan #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @retrophiles1 #TSeries pic.twitter.com/qAPlgL2qC9
— Om Raut (@omraut) January 19, 2021
மேலும் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ராமாயணம் தொடரை மையமாகக் கொண்ட இந்த பிரம்மாண்ட திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . இந்தப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிகர் சைப் அலி கான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் கேப்சர் வேலைகள் தொடங்கி உள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.