Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?…!!!

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார் . தற்போது இவர் ராதேஷ்யாம் ,ஆதிபுருஷ் ,சலார் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . பாகுபலி படத்தில் நடித்தபோது நடிகர் பிரபாஸுக்கும்  நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.

பிரபாஸ்

ஆனால் அதனை மறுத்த இருவரும் தங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே என்பதை தெளிவுபடுத்தினர் . இந்நிலையில் நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் மகளுடன் நடிகர் பிரபாஸுக்கு  திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |