Categories
Uncategorized சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது.

இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை  நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நிலையில் இதே நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்ன வேண்டும் என விஷால் தரப்பும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்த் தரப்பும் தெரிவித்து பதில் மனு அளித்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் ஆலோசனையை இருதரப்பும் ஏற்க மறுத்ததால் தொடர்ந்து இந்த வழக்கை தாங்கள் விசாரிக்கவில்லை என கூறி வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |