Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் புதிய படம்… டைட்டிலுடன் வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானம் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சந்தானத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடித்துவரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார்.

சபாபதி பட போஸ்டர்

‘சபாபதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு  சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வருகிற ஏப்ரல் மாதம் இந்த படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |