நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தில் கதாநாயகிகளாக வாணி போஜன் , பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர் . திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார் . கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் சசிகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
@AnisDirector இயக்கத்தில்
பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு இனிதே நிறைவடந்தது! இக்குழுவினருடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சி 😍#PagaivanukuArulvai shimoga schedule #wrapped up
@vanibhojanoffl @thebindumadhavi @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @teamaimpr pic.twitter.com/FDgqnYmaLE— M.Sasikumar (@SasikumarDir) February 24, 2021
இது குறித்து அவர் ‘இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது! இக்குழுவினருடன் பணிபுரிந்தது மிக்க மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார் . தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் ராஜவம்சம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது .