Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’ . அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் விஜயகுமார் ,மனோபாலா ,ரமேஷ்  கண்ணா, ராதாரவி, தம்பி ராமையா ,சதீஷ், யோகி பாபு, சிங்கம்புலி, ஆடம்ஸ், கும்கி அஸ்வின், சரவணா சக்தி மணி ,சிலம்பம் சேதுபதி, சுந்தர், சாம்ஸ், ரேகா, சமர், சுமித்ரா, சசிகலா, மணி சந்தனா ,மணிமேகலை, லாவண்யா ,மீரா, ரம்யா, தீபா ,ரஞ்சனா ,ரஞ்சிதா, சந்தானலட்சுமி, நிரோஷா ,தாஸ், ரமணி, ராஜ்கபூர் உள்ளிட்ட 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

ராஜ வம்சம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது தமிழ் திரையுலகில் இதுவே முதல் முறையாகும் . இந்த படத்தை இயக்கியுள்ள கதிர்வேலு பிரபல இயக்குனர் சுந்தர் சியிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் . இந்நிலையில் இந்த படம் வருகிற மார்ச் 12ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |