நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது . இந்த படம் கன்னடத்தில் வெளியான காவலுதாரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர், ஜே சதீஷ் ,ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here’s the trailer of #Kabadadaari!Releasing 28th January on the Big screens🙏🏻#KabadadaariTrailer https://t.co/M9DFAFtQ2j@nanditasweta @Directorpradeep@simonkking @asoundstory @dhananjayang @adityamusic @PRODharmadurai @PRORekha @CtcMediaboy
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 12, 2021
இந்த படத்திற்கு தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரனுடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத் திருநாளில் திரையரங்கில் வெளியாவதாக படக்குழு அறிவித்தது . இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ் டிராபிக் போலீஸாக நடித்திருக்கும் கபடதாரி படத்தின் அசத்தலான டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது .