நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது . இந்த படம் கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர் ,ஜே சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தனஞ்ஜெயன் ,ஜான் மகேந்திரனுடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கபடதாரி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது . தைப்பூசத் திருநாளான ஜனவரி 28ஆம் தேதி இந்தப் படம் தியேட்டரில் வெளியாகிறது . இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘கபடதாரி ஜனவரி 28 முதல் உலகமெங்கும் . தைப்பூசத் திருவிழா நாளை விடுமுறை தினமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி’ என குறிப்பிடப்பட்டுள்ளது .