Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’… மிரட்டலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது . இதையடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ,கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . அரசியல் கதை களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் .

ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ,செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் அதாவது இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . இந்த வருடம் பொங்கல் விருந்தாக திரையரங்கில் ஈஸ்வரன் படமும் , சமூக வலைத்தளத்தில் மாநாடு மோசன் போஸ்டரும் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.‌

 

Categories

Tech |