Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவுடன் இணையும் பிரபல இயக்குனர் … வெளியான தகவல்கள்…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.

சுதா கொங்கரா

இதையடுத்து  நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு, பத்து தல ஆகிய படங்கள் தயாராகிறது . இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் சுதா கொங்கரா துரோகி ,இறுதிச்சுற்று , சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் . மேலும் இவர் புத்தம் புது காலை, பாவ கதைகள் ஆகியவற்றில் ஒரு கதையை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |