Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘டான்’ படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் ‌.

டான் படக்குழுவினர்

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஆர்ஜே விஜய், பாலசரவணன் ,காளி வெங்கட், சூரி, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் . இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரெடக்ஷன் நிறுவனமும் லைகா புரடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்நிலையில் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது .

Categories

Tech |